இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு ஏதிராக மட்டக்களப்பு – வாகரை கட்டுமுறிவு மக்கள் நேற்று செவ்வாய் கிழமை (10) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
27 மில்லியன் ரூபா செலவில் பாலம் ஒன்று புனரமைத்து தருவதாக கூறி பாலத்தினை உடைத்து நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரைக்கும் புரைமைத்து தரவில்லை எனக் கூறியே மக்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
‘எமக்கு வீதியே தடை பி்ள்ளைகளின் தடைக்கு’ – ‘பாலத்துக்கு கல் வைத்து கங்கணம் கட்டினீர் – இருந்த வீதியை இல்லாமல் செய்துள்ளீர் அமலே’ என்ற வாசகங்களைத தாங்கிய பதாகைகளுடன் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பாலத்துக்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாவும் இதை யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் மக்கள் போராட்டத்தின் போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த பகுதியில் 400 குடும்பங்கள் வசிப்பதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.