மன்னார் மாவட்டத்தில் இன்று புதன் கிழமை (10) அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகளும் மடு கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளுமாக 15 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்தமைக்கு அமைவாக இன்று புதன்கிழமை (10) மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாகவும் இதற்கான மறு பாடசாலை தினம் ஒன்றை பின்னர் அறிவிப்பதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.