கொட்டித்தீர்த்த மழை: யாழில் 33,823 பேர் பாதிப்பு; 111 வீடுகள் சேதம்; 6 இடைத்தங்கல் முகாம்கள்!

Date:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் பொழியும் அடைமழையினால் யாழ் மாவட்டத்தில் 33,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூறிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று (10) மாலை 6 மணி வரையான நிலவரம் குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தகவல்படி-

10,188 குடும்பங்களை சேர்ந்த 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலகத்தில் 6 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் 726 பேரும், காரைநகர் பிரதேச செயலகத்தில் 533 பேரும், யாழ் பிரதேச செயலகத்தில் 4,389 பேரும், நல்லூர் பிரதேச செயலகத்தில் 4,698 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 2,751 பேரும், சங்கானை பிரதேச செயலகத்தில் 3,554 பேரும், உடுவில் பிரதேச செயலகத்தில் 506 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்1,489 பேரும், கோப்பாய் பிரதேச செயலகத்தில் 3,465 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 1,604 பேரும், கரவெட்டி பிரதேச செயலகத்தில் 3,982 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 5,589 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் 531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. 110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

6 இடைத்தங்கல் முகாம்களில் 96 குடும்பங்களை சேர்ந்த 308 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 5 பேரும், நல்லூர் பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 5 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 2 இடைத்தங்கல் முகாம்களில் 137 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 27 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 128 பேரும்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்