வங்கக் கடலில் இன்று (9) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆட் திகதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை, நாளை மறுநாள் கடுமையான மழை பொழியலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே அடைஅழை பொழிந்து வரும் நிலையில், நேற்றிரவு முதல் பல பகுதிகளில் விடாத அடை மழை பொழிந்து வருகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அச்சுவேலி, தொண்டமானாறு, நீர்வேலி, காக்கைதீவு, பொம்மைவெளி பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்களிற்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
யாழ் நகரில் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1