2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களிற்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்முறை பரீட்சைகள் டிசம்பர் 1 முதல் 11 வரை நடைபெறும்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், அழகியல் பாடங்களின் செய்முறை பரீட்சைகள் நடத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




