கவர்சி வெடிகுண்டு பூனம் பாண்டேவை தாக்கியதற்காக அவரின் கணவர் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையும், மொடலுமான பூனம் பாண்டே இயக்குநரும், தயாரிப்பாளரும், எடிட்டருமான சாம் அகமது பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பூனம் தன் கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சாம் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார் பூனம். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாம் பாம்பேவை நேற்று கைது செய்துள்ளனர்.
சாம் தாக்கியதில் பூனம் பாண்டேவின் தலை, கண், முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறதாம். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாம் பாம்பே தன்னை தாக்கியதாக பூனம் பாண்டே போலீசில் புகார் தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக சாம் தன்னை தாக்கியதுடன், மிரட்டவும் செய்ததாக 2020ம் ஆண்டு புகார் அளித்தார் பூனம். இதையடுத்து சாம் பாம்பே கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக கூறினார் பூனம். தன்னை ஒரு விலங்கை நடத்துவது போன்று சாம் நடத்துவதாக தெரிவித்தார்.
தற்போதைய சம்பவம் குறித்து பூனம் தெரிவிக்கையில்,
சாம் என் கழுத்தை பிடித்து நெரித்தார். நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன். முகத்தில் குத்தினார், முடியை பிடித்து இழுத்தார். எப்படியோ அவரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டேன் என்றார்.