சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இன்று (9) காலை சிலாபம் முகத்துவாரத்தில் 19 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் ஒன்றையும் கைப்பற்றினர்.
சிலாபம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர், ஒரு பெண், மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.




