இயற்கை அனர்த்தங்களினால் 6 பேர் பலி: 7,000 பேர் பாதிப்பு!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 700 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்