25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 8 நாட்களில் 154 கொரோனா தொற்றாளர்கள்

மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (9) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார்,நானாட்டான்,மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 7 ஆம் திகதி மன்னாரை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இவ்வருடம் 2530 கொரோனா தொற்றாளர்களும் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறிதரன் எம்பிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அநியாயம் – தமிழரசுக் கட்சியின் கடும் கண்டனம்

east tamil

சிறைச்சாலை பேருந்தின் அடியில் 6 கி.மீ தொங்கிக் கொண்டு பயணித்து தப்பித்த கடாபி 15 வருடங்களின் பின் கைது!

Pagetamil

தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து – சிக்கிய 10 பேர் கைது

east tamil

மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

east tamil

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

Pagetamil

Leave a Comment