31.3 C
Jaffna
March 28, 2024
உலகம்

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளின் பயணிகளிற்கு கட்டுப்பாட்டை தளர்த்தியது சிங்கப்பூர்!

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தாய்லந்து, பிரேசில், மியன்மார் உள்ளிட்ட 23 நாடுகள், பயணங்களுக்கான 4ஆம் பிரிவிலிருந்து 3ஆம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

அந்த மாற்றம் 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

3ஆம் பிரிவில் உள்ள நாடுகளிலிருந்து வருவோர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் தங்களைப் பத்து நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அது வீடாகவும் இருக்கலாம். வீட்டில் எளிதில் பாதிக்கப்படக்கூடியோர் இருந்தால், அவர்கள் தங்களை ஓர் அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் சாத்தியப்படாவிட்டால், மாற்று இடத்துக்கு அவர்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் மட்டுமே ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால் இனி, நிபுணத்துவம் பெற்ற இடங்களில் செய்யப்படும் ART பரிசோதனையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பணிக்குழு சொன்னது.

Safe Travel Website இணையத்தளத்தில் பயணங்கள் குறித்த முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ( https://safetravel.ica.gov.sg )

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment