சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னை மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில், இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இடைவெளியின்றி தற்போது வரையிலும் பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளது. சாலைகளே கண்ணுக்கு தெரியாதவாறு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
பல்வேறு இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் சுகாதார சீர்கேடான நிலை காணப்படுகிறது.
இந்தநிலையில் வெள்ளம் பாதிப்பு உள்ள பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். எக்மோர், டவுடன், கே.என். கார்டன், படலம், நியூ பாலஸ் ரோடு, ஒட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்ய நாகர் உறைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பாடி பாலம் வழியாக பாபா நகர், ஜிகேம் காலனி, ஜவஹர் நகர் வழியாக வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த ஸ்டாலின் பேப்பர் மில் சாலை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.