மேயாத மான் படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர்.
கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம். எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜய்யுடன் மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன. 2 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நிறைய ரசிகர்களும் சேர்ந்துள்ளனர்.
பிரியா பவானி சங்கர் 10 வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது. அதில், ‘‘யாராவது என்னிடம் வாழ்க்கை முழுவதும் என்கூட இருப்பேன் என்று சொன்னால் எனது ரியாக்சன் இதுதான்‘‘ என்று குறிப்பிட்டு பொய்சொல்கிறான் என்ற தொனியில் புன்முறுவலோடு கும்பிட்டு வழியனுப்புவதுபோல் ஒரு மீம்சையும் பகிர்ந்துள்ளார்.
இந்த மீம்ஸை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் காதலரை பிரிந்து விட்டாரா என்று வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பிரியா பவானிசங்கர் விளக்கம் அளிப்பாரா என்றும் எதிர்பார்க்கின்றனர்.