தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய மாணவர்கள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை முதல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.
மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட 59 உயர் ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இது ஆரம்பிக்கப்படும்.
இம்மாதம் 4ஆம் திகதி வரையில் 22,902 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி எதிர்வரும் செவ்வாய்கிழமை தேசிய போராட்ட தினமாக பிரகடனப்படுத்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படும்.