கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07) கையளிக்கப்பட்டது.
கொட்டகலை – அட்டன் பிரதான வீதியில் இருந்து உள்ளே செல்லும் கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதையானது கடந்த வருடம் புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது. 4.45 கிலோமீற்றர் பாதையானது 80 மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு பாதையினை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், முன்னார் மத்திய மகாணசபை உறுப்பினர்கள் கணபதி கனகராஜ், அருளானந்தம் பிலிப்குமார் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
–க.கிஷாந்தன்-