24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த வாகன சாரதி மாரடைப்பினால் உயிரிழப்பு: வாகனத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது!

கொடிகாமத்தில் வாகன சாரதியொருவர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

பயணிகளை ஏற்றி வந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வவுனியா வீரபுரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (61) என்பவரே உயிரிழந்தார்.

கொழும்பிலிருந்து ஹைஏஸ் வாகனமொன்றில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.  கொடிகாமத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டார்.

உடனடியாக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment