பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் விமல் வீரவன்ச இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கடிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில்,
கூட்டணி கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலையும், அதன் பின்னர் கட்சித் தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடலை நடத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை என்பதும், அவரது கட்சியின் பிரதிநிதி மாத்திரம் கலந்துகொண்டிரு;தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.