நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பதுளை, காலி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலக பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொடிப்பிலி தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் எல்ல மற்றும் பசறை, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை, கங்காவட கோரளை, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ, மற்றும் கண்டியில் உடுநுவர, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல மற்றும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்ட, மற்றும் உக்குவெல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.