84 வயதான தாத்தா மற்றும் 18 வயது காதலனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான 18 வயது காதலனையும், 84 வயதான தாத்தாவையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர உத்தரவிட்டுள்ளார்.
84 வயதான தாத்தா இருவருக்குமிடையிலான காதலிற்கு உதவும் போர்வையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார். காதலனுடன் பேசுவதற்கு, தாத்தாவின் கையடக்க தொலைபேசியையே அவர் பயன்படுத்தினார்.
காதலனுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் தாத்தாவின் வீட்டிற்க சிறுமி செல்வார்.
எனினும் கையடக்க தொலைபேசியை கோடுப்பதற்கு ‘கூலியாக’ , ஒவ்வொரு முறையும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தந்தை இல்லை, அவரது தாயார் காவலில் இருந்த போதே இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது.