26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

9 வது மகளை 55 வயது முதியவருக்கு விற்ற தந்தை: ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடியின் விளைவு!

தனது 9 வயது மகளை 55 வயது ஆணுக்கு மணப்பெண்ணாக விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் தந்தை ஒருவர், ‘சிறுமியை அடிக்க வேண்டாம்’ என்று புதிய கணவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 வயதாகும் பர்வானா மாலிக் என்ற சிறுமி, நரைத்த தாடி மற்றும் புருவங்களை கொண்ட 55 வயது முதியவரின் மணமகள் ஆனார்.

ஆப்கானிஸ்தானில் தலைதூக்கியுள்ள மனிதாபிமான நெருக்கடியை வெளிச்சமிடுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

பர்வானாவை வாங்கிய 55 வயதானவர் அழைத்துச் சென்ற நாளில், அழுதுகொண்டிருந்த அவரது தந்தை அப்துல் மாலிக், தனது குழந்தையை காயப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினார் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதை கூறியபோது, குற்றவுணர்வுடன் ‘உடைந்த’ நிலையிலிருந்த அப்துல், கண்ணீர் விட்டு அழுதார்: ‘இவள்தான் உங்கள் மணமகள். தயவுசெய்து அவளை கவனித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள்தான் பொறுப்பு, தயவு செய்து அவளை அடிக்காதீர்கள்’ என கெஞ்சியுள்ளார்.

பர்வானாவின் குடும்பம் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும், ஆப்கானிஸ்தான் மேலும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தங்கள் இளம் பெண்களை திருமணம் செய்ய விற்று பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் ஏராளமான ஆதரவற்ற குடும்பங்களில் அடங்குவதாகவும் தெரிவித்தனர்.

பர்வானா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பட்கிஸ் மாகாணத்தில்  இடம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வருகின்றனர். அவர்கள் மனிதாபிமான உதவி மற்றும் கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இதன் மூலம் ஒரு நாளைக்கு இலங்கை ரூபாயில் சுமார் 400 ரூபா சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சர்வதேச மனிதாபிமான உதவி நிறுத்தப்பட்டுள்ளது – மேலும் உணவு போன்ற அடிப்படை பொருட்களை வாங்க முடியாத பர்வானா போன்ற குடும்பங்களால் அதன் விளைவுகள் ஆழமாக உணரப்படுகின்றன.

பர்வானாவின் 12 வயது சகோதரியை சில மாதங்களுக்கு முன்பு விற்று தனது குடும்பத்தை காப்பாற்ற அப்துல் கட்டாயப்படுத்தப்பட்டார்.

வெளிறிய இளஞ்சிவப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த பர்வானா,  ‘எங்களிடம் ரொட்டி, அரிசி அல்லது மாவு இல்லாததால் என் தந்தை என்னை விற்றுவிட்டார். என்னை ஒரு முதியவரிடம் விற்றுவிட்டார்.’ என சிஎன்என் இடம் கூறினார்.

மகளை விற்ற குற்றவுணர்ச்சியில், இரவில் தூங்க முடியாமல் தவிப்பதாக அவரது தந்தை அப்துல் கூறினார்.

அவர் வேலை தேடியும் கிடைக்காததால், உறவினர்களிடம் கடன் வாங்கியதாகவும், அவரது மனைவி முகாமில் வசிப்பவர்களிடம் உணவுக்காக கெஞ்சியும் எதுவும் கிடைக்கவில்லையென்றும் கூறினார்.

அவரது குடும்பத்தில் 8 பேர். மற்றையவர்களை வாழ வைப்பதெனில் பர்வானாவை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என அப்துல் கூறினார்.

பர்வானா 200,000 ஆப்கானிக்கு (442897 இலங்கை ரூபா) விற்கப்பட்டார். இந்த தொகை, பணமாகவும், செம்மறி ஆடுகள் மற்றும் நிலம் போன்ற வடிவங்களில் அப்துல் குடும்பத்திற்கு கிடைக்கும்.

தான் வளர்ந்ததும் ஆசிரியையாக வேண்டும் என்று பர்வானா ஆசைப்பட்டார். தன் குடும்பத்தையோ அல்லது தன் கல்வியையோ விட்டுப் பிரிய விரும்பாதவர், தன் பெற்றோரின் மனதை மாற்ற முடியும் என்று நம்பினார்.

ஆனால், அவரை வாங்குபவர், கடந்த வாரம் பணத்துடன் வீட்டிற்கு வந்து விட்டார்.

திருமணத்தில் சற்றும் விருப்பமில்லாமல், வீட்டிலிருந்து செல்ல மறுத்தார். புதிய இடத்தில் தன்னை அடித்து துன்புறுத்துவார்களோ என்றும் அஞ்சினார்.

மகளை ஒப்படைப்பதற்கு முன், புதிய கணவனிடம்  ‘இவள்தான் உங்கள் மணமகள். தயவுசெய்து அவளை கவனித்துக் கொள்ளுங்கள். இனி அவளுக்கு நீங்கள்தான் பொறுப்பு, தயவு செய்து அவளை அடிக்காதீர்கள்’ என அப்துல் கூறினார்.

பர்வானாவின் கையைப் பிடிப்பதற்கு முன், அந்த நிபந்தனைகளிற்கு புதிய கணவன் சம்மதித்தார்.

பர்வானாவை தனது குழந்தையாக பார்த்துக்கொள்வதாக புதிய கணவன் கூறினார்.

‘எனக்கு ஏற்கனவே ஒரு மனைவி உள்ளார். பர்வானாவின் தந்தை மிகவும் ஏழ்மையானவர், அவருக்கு பணம் தேவை. அவள் என் வீட்டில் வேலை செய்வாள். நான் அவளை அடிக்க மாட்டேன். நான் அவளை ஒரு குடும்ப உறுப்பினராக நடத்துவேன். நான் அன்பாக இருப்பேன்.’ என புதிய கணவன் கூறினார்.

சிஎன்என் அறிக்கைப்படி, ஆப்கான் பொருளாதார நெருக்கடியால், சிறுமிகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளது. அண்மையில் 10 வயதான சிறுமியொருவர் 200,000 ஆப்கானிசுக்கு 70 வயது முதியவருக்கு விற்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

Leave a Comment