உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாடிவரும் இன்றையதினம் திருகோனமலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தமது சுபகாரியங்களில் ஈடுபட்டிருந்தனர்
இன்றைய தினம் (04) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையுடன் காப்புக்கட்டும் (கேதார கௌரி காப்பு) நிகழ்வும் ஆரம்பமானது
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஆலயங்களில் இவ்வாறு சுபகாரியங்களில் ஈடுபடுவதனால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை அவதனிக்க கூடியதாக இருந்தது
இவ் தீபாவளி சிறப்பு தினத்தில், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை வணங்குவது வழக்கம். இந்த நாளில் சிறப்புப் பூஜைகள் செய்தால் உடல் நலம், செல்வம், செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்து சந்திர நாட்காட்டியின்படி, கார்த்திகை மாதத்தின் 15-வது நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பித்த சுப நேரம் முதல் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கௌரி காப்பு காப்புக்கட்டும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-