முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தமைக்கு எதிராக காணாமல் போன இளைஞர்களின் நான்கு பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிப்பதா இல்லையா என்பது குறித்து நவம்பர் 10ஆம் திககதி உத்தரவிடுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அறிவித்துள்ளது
மனுவில் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதா என்பது குறித்த முடிவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட இருந்தது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை கைவிடுவதற்கு சட்டமா அதிபரின் தீர்மானம் தொடர்பான இரகசிய அறிக்கையை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சமர்ப்பித்தார்.
அறிக்கையின் மீது எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.