பொது மக்கள் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம் இலங்கை அதன் முந்தைய குழப்ப நிலைக்குத் திரும்பும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் குறிப்பாக அனுராதபுரம் மற்றும் தெற்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் வேகமாக அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
எனவே, வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
திருமணங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கும் என்று கூறிய அவர், பொதுமக்கள் தங்கள் மாவட்டத்திற்கு வெளியே சுற்றுலா செல்ல ஊக்குவிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
இன்று காலை 4 மணி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அதன்படி நாளை முதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவிட்-19 ஜனாதிபதி செயலணியின் அடுத்த கூட்டத்தில், பாடசாலைகளுக்குள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதாக உபுல் ரோஹன தெரிவித்தார்.