சன் டிவியில் தொடர்ந்து ரொப் ரேட்டிங்கில் ரோஜா சீரியல் இருந்து வருகிறது. பரபரப்பான கதை களம், விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் அணு என்ற வில்லி கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் ஷாமிலி சுகுமார்.
இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் ரோஜா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக அனுவாக யார் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் வி.ஜே அக்ஷயா அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவார்.
தற்போது அக்ஷயா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாக எனக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டுள்ளது.