பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சநிலை மாநாடு, இன்று (31) ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கவுள்ளது.
உலக நாடுகளிலிருந்து சுமார் 200 தலைவர்களும் 20,000 பேராளர்களும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் தொடர்பிலான கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பாகப் பணக்கார நாடுகள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின் அரசாங்கங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கவுள்ளன, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏழை நாடுகளுக்கு எவ்வாறு உதவவிருக்கின்றன போன்ற அம்சங்கள் உற்று நோக்கப்படும்.
இந்நிலையில் பருவநிலை மாற்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ள உலகத் தலைவர்கள் மீதான நெருக்குதலைத் தொடருமாறு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இளையவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1