26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

மூடிய அறை சந்திப்பை பங்காளிகள் பகிரங்கப்படுத்தினரா?: பெரமுன கடுப்பு!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (28) இரவு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாஉல்லா, டிரான் அலஸ், வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துரலிய ரத்தின தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்கும் தீர்மானம் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்குள்ளேயே உள்ள பிரச்சினைகளை வெளியில் கொண்டு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டுக் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 10 மணிவரை நான்கரை மணித்தியாலங்கள் நீடித்த போதிலும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யுகதடனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் எழுத்து மூலம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு கூட்டுக் கட்சிகளின் தலைவர்களிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் உடனடியாக ஊடகங்களிடம் கசிந்துள்ளது. திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் தொலைபேசியை இயக்கி, மறுமுனையில் சில ஊடகவியலாளர்கள் அதை கேட்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக பெரமுன தரப்பினர் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (29) பிற்பகல் நடைபெறவிருந்த ‘மக்கள் பேரவை’ கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

Leave a Comment