புடிக்குடியிருப்பு உடையார்கட்டு காட்டுப் பகுதியில் வகைப்படுத்தப்படாத 21 குண்டுகள் மற்றும் மோட்டார் செல் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (28) கைப்பற்றினர்.
முல்லைத்தீவு கடற்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் மோட்டார் செல்களை செயலிழக்கச் செய்து அழிக்க நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1