மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த ஒருவர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயமடைந்தனர்.
சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வந்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையையும் மகனையும் மோதித்தள்ளினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது மகனும், தந்தையும், மதுபோதையில் மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனும் காயமடைந்தனர்.
தந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகனும், விபத்தை ஏற்படுத்திய இளைஞனும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1