25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

நயினாதீவில் அதிக மழைவீழ்ச்சி; யாழ் மாவட்ட மக்களிற்கான வானிலை எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினாதீவு பகுதியில் 80.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை என்றார்.

வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் குறித்த காலப்பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு60- 65 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் குறித்த காலப்பகுதியில் கடலானது கொந்தளிப்பாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கடற்தொழிலுக்கு செல்வோர் குறித்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் குறித்த காலப்பகுதியில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினா தீவு பகுதியில் 80.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை.

சுதுமலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் க கடந்த 30 வருடங்களாக நீர் தேங்கி நிற்கின்ற பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. குறிப்பாக கொத்தலாவல வடிகால் அமைப்பு சரியாக இயங்காததன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

நேற்றையதினம் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப பிரிவினருடன் சென்று அப்பகுதியில் கலந்துரையாடலை மேற்கொண்டோம். குறித்த கலந்துரையாடலில் பிரகாரம் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய சுமுகமான தீர்வு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment