ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது.
இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
13 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழு, இலங்கைக்குள் ஒரே நாடு, ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவை தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்தல் மற்றும் பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா என தீர்மானித்து பொருத்தமானதாக கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டது. சிங்கள, முஸ்லிம்களை கொண்ட இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறாதமை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1