லாவோஸ் காவல்துறையினர் 55 மில்லியன் ஐஸ் (methamphetamine) மாத்திரைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். ஆசியாவில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான போதைப்பொருள் முறியடிப்பு சம்பவம் இதுவாகும்.
பியர் பானங்களை ஏந்திச்செல்லும் லொரியில் 55.6 மில்லியன் ஐஸ் மாத்திரைகளும், 1.5 தொன் கிரிஸ்டல் மெத்தும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆசியாவைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் கைப்பற்றப்பட்ட ஆக அதிகமான போதைப்பொருள்கள் அது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் லாவோஸ் கைப்பற்றிய ஐஸ் மாத்திரைகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டில் கைப்பற்ற கிரிஸ்டல் மெத்தில் மூன்றில் ஒரு பங்கு கிரிஸ்டல் மெத் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் கூறினார்.
லாவோஸ் சமீபத்திய ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கான நுழைவாயிலாக இருந்து வருகிறது, போதைப்பொருள்கள் அண்மை சில ஆண்டுகளாக மியன்மாரின் ஷான் (Shan) மாநிலத்திலிருந்து லாவோஸுக்குக் கடத்தப்படுகிறது.
பெப்ரவரியின் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் மியான்மரில் பொருளாதார சரிவு ஆகியவற்றால் சமீபத்திய மாதங்களில் இந்த போக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீவிரமடைந்துள்ளது.
சம்பவம் நடந்த போக்கோ (Bokeo) வட்டாரம் மியன்மார், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இது தங்க முக்கோண வலயம் என போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலயத்திற்குள்ளேயே போக்கோ பகுதி வருகிறது.
இந்த முக்கோண வலயத்திலிருந்து இயங்கும் குற்றக்கும்பல்களால் ஐஸ் போதைப்பொருள் ஜப்பான் மற்றும் நியூசிலாந்து வரை விநியோகிக்கப்படுகிறது.