26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர் .

கோவிட்19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1696 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, , குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து , வேண்டும் நீதி வேண்டும்,சர்வதேசமே பதில் சொல் என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அண்மையாக 15க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment