29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

காத்தான்குடி விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவை முகமது அம்ஹர் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி அதிகாலை 5.30 மணிக்கு பயணித்த கார் மீது, காத்தான்குடி பீச் வீதியில் இருந்து பிரதான வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞை விளக்கு சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment