25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இந்தியா

கடும் நிபந்தனைகளுடன் ஆர்யன்கானிற்கு ஜாமீன்!

மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். கடந்த 3 நாட்களாக அவர் ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.

அப்போது அவர் ‘‘ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல், அதற்கும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யன் கான் அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர்.

ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக வழிநடத்துகிறது. ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.’’ எனக் கூறினார்.

மேலும் இன்று ஆஜரான முகுல் ரோஹத்கி தனது வாதங்கள் தொடர்பான ஆவணங்களையும் சமர்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஹத்கி கூறியதாவது:

3 நாட்கள் வாதங்களுக்கு பிறகு ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட்,, மொடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வெளியான பிறகு சிறையிலிருந்து வருவார்கள்.

விரிவான உத்தரவு நாளை வழங்கப்படும். சனிக்கிழமைக்குள் அனைவரும் சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என்று நம்புகிறோம்.

எனக்கு இது வழக்கமான வழக்கு தான். சில வழக்குகளில் வெல்வது, சிலவற்றை இழப்பது வழக்கம் தான். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இதேவேளை, ஆர்யன் கான் கடும் நிபந்தனைகளுடனேயே சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

ஆர்யன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இது மட்டுமல்ல, பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆர்யன் எந்த ஊடக சந்திப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின்  விசாரணைக்கு பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறருடன் தொடர்பு கொள்ள ஆர்யன் கான் அனுமதிக்கப்படவில்லை. ஆதாரங்களை சிதைக்க முயற்சிக்கக் கூடாது.

ஆர்யன் கான் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கக் கூடாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment