Penny Black என்ற உலகின் முதல் அஞ்சல் தலை ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
அதன் விலை, சுமார் 8.25 மில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியா அரசியாரின் படத்தைக் கொண்ட அந்த அஞ்சல் தலை, 1840ஆம் ஆண்டு ஏப்ரல் 10 என்று திகதியிடப்பட்ட ஆவணத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த வகை அஞ்சல் தலை 1840ஆம் ஆண்டு, மே 6ஆம் திகதி பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது நடப்பிலுள்ள அஞ்சல் அமைப்பைத் தொடக்கி வைத்ததும் அந்த அஞ்சல்தலைதான் என்று கூறப்படுகிறது.
அதற்கு முன்னர், அஞ்சலைப் பெறுபவர்தான் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.
ஏலத்தில் விடப்படவுள்ள அந்த அஞ்சல்தலை, முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளில் ஒன்று என நம்பப்படுகிறது.
அவ்வாறு முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட Penny Blacks அஞ்சல்தலைகளில் 3 தான் எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எஞ்சிய இரண்டு அஞ்சல் தலைகள், பிரிட்டனின் அஞ்சல்தலை அரும்பொருட் காட்சியகத்தில் உள்ளன.