27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

மனிதர்களாக கருதப்பட்டு நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவுள்ள நீர் யானைகள்!

கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் பெரும்புள்ளி பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகள் மனிதர்களாகக் கருதப்பட்டு, நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படவுள்ளன.

அத்தகைய சட்ட நிகழ்வு அமெரிக்காவில் முதன்முறையாக இடம்பெறவுள்ளது.

முன்னதாக, எஸ்கோபார் அமெரிக்காவுக்குள் 4 நீர்யானைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்திருந்தார். அவர் 1993ஆம் ஆண்டில் இறந்ததையடுத்து, நீர்யானைகள் விடுவிக்கப்பட்டன. இனப்பெருக்கத்தால் தற்போது 80 நீர்யானைகள் உள்ளன.

அவை உள்ளூர் சுற்றுச்சூழலைப் பெருமளவில் பாதித்து வருவதாக நம்பப்படுகிறது. அதனால் அவற்றைக் கொல்லும் திட்டத்தில் அமெரிக்கா இருந்தது.

இம்மாதம் 15ஆம் திகதியன்று, அவற்றைக் கொல்லக் கூடாதென விலங்குகளுக்கான சட்டபூர்வப் பாதுகாப்பு நிதியம் மனு ஒன்றை முன்வைத்தது.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நீர்யானைகள் சட்டப்படி மனிதர்களாகக் கருதப்பட்டு, அவற்றின் தொடர்பில் நீதிமன்ற வழக்குத் தொடுக்கப்படவுள்ளது.

நீர்யானைகளின் சார்பாக சட்டத்தரணி ஒருவர் வாதாடவுள்ளார். அவற்றைக் கொல்வதற்குப் பதிலாகக் கருத்தடை செய்வது ஒரு சிறந்த முடிவு என்றும் அந்த சட்டத்தரணி கருதுகிறார்.

அந்த வழக்கு, விலங்குகளின் உரிமையைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

Leave a Comment