27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

44 வயது கள்ளக்காதலியை கட்டிய புருசன் அழைத்துச் சென்ற சோகம்: 22 வயது கலாப காதலன் எடுத்த விபரீத முடிவு!

தன்னுடன் தங்கியிருந்த 4 பிள்ளைகளின் தாயான 44 வயது கள்ளக்காதலியை, அவரது கணவர் வந்து அழைத்துச் சென்ற சோகத்தில் 22 வயதான இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த பகீர் சம்பவம் திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அந்த இளைஞன் பெற்றோர் இல்லாத வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். தனது பாட்டியுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

சில காலங்களுக்கு முன்னர் குச்சவெளிக்கு கூலிக்கு சென்ற இவர் 44 வயதுடைய குடும்பப் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

அடைந்தால் கள்ளக்காதலன், இல்லையேல் மரணதேவன் என தீர்மானித்த அந்த 44 வயது குடும்பப் பெண், 22 வயது காதலனுடன் கந்தளாய்க்கு சென்றுள்ளார். தனது 3 பிள்ளைகளை வீட்டிலேயே கைவிட்டு, ஒன்றரை வயதான கடைசி பிள்ளையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்.

கதவு கூட இல்லாத சிறிய குடிசை வீட்டில் காதலனுடன் அவர் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

தனது மனைவியின் இருப்பிடத்தை அறிந்த கணவன், நேற்று முன்தினம் (24) அந்த குடிசை வீட்டுக்கு சென்றார். மனைவியை சமரசப்படுத்தி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

கள்ளக்காதலி சென்று விட்டதால், இனி வாழ்க்கையில் தனக்கு யாருமில்லையென யோசித்த இளைஞன், அன்றிரவே விபரீத முடிவெடுத்தார்.

தனது வீட்டின் முன் உள்ள பலா மரத்தின் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

east tamil

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

Leave a Comment