ரி20 உலகக்கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 130 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.
7வது ரி20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 10.2 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1