25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

சீன நிறுவனத்திற்கு எதிராக மற்றொரு தடையுத்தரவு

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்ததாக கூறப்படும் Qingdao Seawin Biotech Group என்ற சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவர் மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக இலங்கை உரக் கம்பனி மற்றுமொரு இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளது.

கொழும்பு வணிக நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வௌியிட்டுள்ளது.

மேலும், குறித்த சீன நிறுவனத்திற்காக திறக்கப்பட்டுள்ள கடனீட்டுக் கடிதத்தின் ஊடாக மத்திய வங்கியினால் எவ்வித கொடுப்பனவும் செலுத்த முடியாது என குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இல 02, வர்த்தக உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியினால் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் கோரிக்கையின் பேரில் சீன நிறுவனம் மற்றும் அதன் உள்ளூர் முகவர் கடனீட்டுக் கடிதத்தின் கீழ் எந்தவொரு கொடுப்பனவையும் பெறுவதைத் தடைசெய்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

Leave a Comment