வெளிநாட்டு கடற்படை நடவடிக்கைகளின் மூலம் இலங்கை கடற்படைக்கு கிடைக்கும் பெருந்தொகையான வருமானத்தை மோசடியான வர்த்தகர் ஒருவருக்கு வழங்க தற்போதைய நிர்வாகம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சந்தர்ப்பம் 2009 டிசம்பரில் கடற்படைக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.
ஆரம்ப இரண்டு வருடங்களில் கடற்படைக்கு 2 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கொள்ளையர்கள் குழுவொன்று நிலைமையை அவதானித்து ஒப்பந்தத்தை தாங்களே பெற்றுக்கொண்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.
2012 முதல் 2015 வரையிலான மூன்று வருட ஒப்பந்தத்தின் விளைவாக நாடு, கடற்படை மற்றும் திறைசேரி ஆகியன 10 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்தார்.