கனடாவின் கிழக்கு டொராண்டோவில் தாயையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோரி ஃபென், அந்த நேரத்தில் மனரீதியாக “உயிரற்றவர்” என்றும், குற்றவியல் நோக்கத்துடன் இந்த கொலையை செய்யவில்லையென்றும் நேற்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
39 வயதுடைய கிராஸீமிரா பெஜ்சினோவ்ஸ்கி, அவரது 15 வயது மகன் ராய் மற்றும் 13 வயதுடைய மகள் வெனிலியா ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
மார்ச் 14, 2018 அன்று, கிழக்கு டொரன்டோ அஜாக்ஸ், ஒன்ட்., வீட்டின் கராஜில் கிராஸீமிராவின் சடலம் காணப்பட்டது. குத்திக் கொல்லப்பட்டு, குப்பை மற்றும் டயர்களால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மகள் அடித்தளத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார் மற்றும் அவரது மகன் அவரது படுக்கைக்கு அருகில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
கிராஸீமிராவின் மகன் ராய் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார். மகள் வெனிலியா மற்றும் தாய் கிராஸீமிரா ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபென்னை விட்டு கிராஸீமிரா பிரிந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த ஃபென், அஜாக்சில் வைத்து மூவரையும் கொலை செய்ததாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
33 வயது நிரம்பிய ஃபென் நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் தான் ஒரு இறையாண்மை கொண்ட அரசர் என்று கூறுகிறார். ஃபென் தரப்பிலிருந்து ஆவணங்களை சமர்ப்பிக்க அவரது வழக்கறிஞர் வழிகாட்டுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
குற்றவாளி கைதான மறுநாள், துப்பறியும் நபரிடம் ”தான் கோகோயின் மன நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இல்லையெனில் கிராஸிமிராவை ஒரு போதும் காயப்படுத்தி இருக்க மாட்டேன்” என்றும் கூறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரச வழக்கறிஞர் மைக் நியூவெல் , அவர் என்ன செய்கிறார் என்பதை ஃபென் சரியாக அறிந்திருந்தார், மேலும் கோகோயின் காரணமாக மனநோய் நிலையில் இல்லையென வாதிட்டார்.
ஃபென்னுக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மேரி க்ரீமர், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொல்லும் உடல் ரீதியான செயலை ஃபென் செய்துள்ளார் என்பதை அவர்கள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதை ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
“இந்த நீதிமன்றத்தின் முன் உள்ள ஒரே பிரச்சினை இதுதான்: மரணத்தின் போது ஃபென்னின் மனநிலையை போதையில் பாதித்ததற்கான ஆதாரம் உள்ளதா?” க்ரீமர் கூறினார்.
ஃபென் ஒரு “கடுமையான” கோகோயின் பயன்படுத்துபவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாகவும், அவரும் பெஜ்சினோவ்ஸ்கியும் அவர்கள் வசித்த வீட்டின் அடித்தளத்தில் அன்றிரவு கோகோயின் வைத்திருந்ததாகவும் கூறினார்.
இந்த வழக்கில் நீதிபதி 2022 ஜனவரி 21ஆம் திகதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.