சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹாம்டாக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளார் இராணுவத் தளபதி அப்தெல் பதாத் அல் புர்ஹான்.
ஆபிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆபிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
சூடான் நாட்டில் தற்போது வரை இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலமாகவே இடைக்கால ஆட்சிக்கு எதிராக இராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அப்படியான முயற்சி நடைபெற அதனை சூடான் அரசு துரிதமாக செயல்பட்டு தடுத்தது.
ஆனால், இன்று அதிகாலை, அப்தல்லா ஹாம்டாக்கை இராணுவத்தினர் வீட்டுச் சிறையில் வைத்தனர். இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு இராணுவத் தளபதி.
சதிப்புரட்சிக்கு ஆதரவளிக்க மறுத்ததை அடுத்து பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை அடையாளம் தெரியாத இடத்திற்கு நகர்த்தி, இராணுவம் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இராணுவ அரசிற்கு ஒத்துழைக்காமலிருப்பதுடன், போராட்டங்களிற்கும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
உலக நாடுகள் கண்டனம்:
சூடான் அரசை இராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது. சூடான்ஈராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல.ஈராணுவம் இந்த முடிவைக் கைவிட்டு, இடைக்கால அரசுக்கு ஒத்துழைத்து நாடு அமைதி வழியில் செல்ல உதவ வேண்டும் என்று கூறியுள்ளது.
சீனாவோஈராணுவத்தின் இருபிரிவுகளும் அமர்ந்து பேசி சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், சூடானில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து அந்நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளன.
I condemn the ongoing military coup in Sudan. Prime Minister Hamdok & all other officials must be released immediately. There must be full respect for the constitutional charter to protect the hard-won political transition. The UN will continue to stand with the people of Sudan.
— António Guterres (@antonioguterres) October 25, 2021
இதற்கிடையில் ஐ.நா., சபையும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பிரதமர், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளைஈராணுவம் கைது செய்துவைத்துள்ள செயல் ஏற்புடையதல்ல. கைதானவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையையும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.