கொலம்பியாவில் அதிகம் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான டெய்ரோ அன்டோனியோ உசுகாவை (ஒட்டோனியல்) பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் கொலம்பியாவில் மட்டுமல்ல, உலகளவில் தேடப்பட்டு வந்தவர்.
ஆட்டோடிஃபென்சாஸ் கைடானிஸ்டாஸ் டி கொலம்பியா அல்லது வளைகுடா குலத்தின் தலைவரான இவர், சனிக்கிழமையன்று உராபா பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் கைது செய்யப்பட்டார்.
டைரோ அன்டோனியோ உசுகா (Dairo Antonio Usuga) என்னும் அந்த நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகக் கொலம்பிய அரசாங்கம் தெரிவித்தது.
டைரோவைப் பிடிப்பதில் துப்புக் கொடுப்பவர்களுக்கு 800,000 டொலர் பரிசுத்தொகையைக் கொலம்பியா அறிவித்திருந்தது.
அமெரிக்காவும் 5 மில்லியன் டொலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
டைரோவின் கும்பல் கொலம்பியாவில் ஆக பலம்வாய்ந்த கடத்தல் குழுவாகும்.
ஜனாதிபதி இவான் டியூக், டைரோ அன்டோனியோ உசுகா பிடிபட்டதை ஒரு வெற்றி என்று பாராட்டினார். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொலம்பிய போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபார் கைது செய்யப்பட்டதற்கு ஒப்பிட்டார்.
“இந்த நூற்றாண்டில் நம் நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இது மிகப்பெரிய அடியாகும்” என்று டியூக் ஒரு செய்தி மாநாட்டின் போது கூறினார். “இந்த வெற்றி 1990 களில் பப்லோ எஸ்கோபரின் வீழ்ச்சியுடன் ஒப்பிடத்தக்கது.”
கொலம்பிய ஜனாதிபதி தனது அரசாங்கம் டைரோ அன்டோனியோ உசுகாவை நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். பெரும்பாலும் அமெரிக்காவிற்கு அவர் நாடு கடத்தப்படுவார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 2009 இல் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவர் முதலில் குறிப்பிடப்பட்டார்.
50 வயதான அவர் அமெரிக்காவில் புரூக்ளின் மற்றும் மியாமியில் “தொடர்ச்சியான குற்றவியல் நிறுவனங்களை இயக்குதல், சர்வதேச கோகோயின் கடத்தல் சதித்திட்டங்களில் பங்கேற்பது மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல்” ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
50 வயது டைரோவைப் பிடித்ததன்மூலம் பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகக் கொல்பிய அரசாங்கம் கூறியது.
சுமார் 5 ஆண்டுகளாக டைரோவை ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகள் தேடிவந்தனர்.
தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஓட்டோனியலைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் உளவுத்துறை தகவல்களை வழங்கின. அதே நேரத்தில் கொலம்பியாவின் சிறப்புப் படைகளின் 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 22 ஹெலிகொப்டர்கள் காட்டில் சோதனை நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டன.