30.9 C
Jaffna
April 20, 2024
இலங்கை

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கையெடுங்கள்!

நெறிமுறையற்ற மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஆளுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசியல் கட்சிகளின் செயலாளர்களின் கடமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று தேர்தல் ஆணைக்குழு கூட்டம் நடந்தபோது இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டிற்கான  வாக்காளர் பதிவேட்டின் வரைவு நகலை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பிய அனைவரின் பெயர்களையும் துணை வாக்காளர் பதிவேட்டில் சேர்ப்பது குறித்து விளக்கமளிக்கவும், வாக்களிக்கும் செயல்முறை மற்றும் திறனை அதிகரிப்பது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கான பட்டறைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் ஆசிரியை கைது!

Pagetamil

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்; மக்கள் அசௌகரியம்: பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

Pagetamil

சினிமா பாணி சம்பவம்: பொறி வைத்து கொல்லப்பட்ட கள்ளக்காதலன்; 34 வருடங்களின் பின் கொலையாளி கைது!

Pagetamil

உடலுறவு கொள்ளாமலே கர்ப்பமானாரா 13 வயது சிறுமி?

Pagetamil

கடலில் பொதுமக்களின் உதவியுடன் குழந்தை பிரசவித்தாரா யாழ்ப்பாண இளம் தாய்?: தீயாக பரவும் போலிச்செய்தி!

Pagetamil

Leave a Comment