தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம் (ஆனந்தி) இன்று (22) காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
1970களில் காந்தியம் அமைப்பி இணைந்து செயற்பட ஆரம்பித்த அவர், மலையக மக்களை வன்னியில் குடியமர்த்துவதில் தீவிரமாக உழைத்தார்.
பின்னர், வைத்தியர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா கைது செய்யப்பட்ட பின்னர், சதானந்தனையும் அரசு தேட ஆரம்பித்தது. சிறிதுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பின்னர், இந்தியா சென்றார்.
அப்போதிருந்து, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (plote) ஆரம்பித்ததில் இருந்து அதன் செயலாளராக செயற்பட்டு வந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1