30.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா முக்கியச் செய்திகள்

ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கு: நடிகை அனன்யா பாண்டேவிடம் 2 மணிநேரம் விசாரணை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தொடர்பான போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தி நடிகை அனன்யா பாண்டேயிடம் விசாரனை நடத்தினர்.

சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் ஆர்யா கான் கைதான நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் நேற்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன்படி நேற்று மாலை அனன்யா பாண்டே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜாரனார்.

ஆர்யன் கானின் வாட்ஸ்அப் விவாதத்தில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் போதைப்பொருள் தொடர்பாக விவாதித்துள்ளனர். சில இடங்களில் அனன்யாவின் பெயர் அழிக்கப்பட்டிருந்தது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தொடர்பான போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனன்யா பாண்டேயிடம் இரண்டு மணி நேரம் விசாரனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக அவரது அறிக்கையை பதிவு செய்ய இன்று காலை 11 மணிக்கு மீண்டும் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் அனன்யா இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல, விசாரணைக்காக மட்டுமே அழைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

Leave a Comment