26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா!

நெதர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.சி.சி. ரி20 உலகக்கிண்ணம் கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் திகதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் தகுதிச் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

ரொஸ் வென்ற நமீபியா அணியின் கப்டன் எராஸ்மஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மக்ஸ் ஒடொவுட் 56 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இது தவிர அதிகபட்சமாக கோலின் அகெர்மேன் 35 ரன்கள் அடித்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வெய்ஸ் 66 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து நமீபியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment