26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

மீட்கப்பட்ட தமிழக மீனவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில்: இருவருக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்படை படகு மோதி, கடலில் மூழ்கி காணாமல் போன தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைநகர், கோவளம் கடற்பரப்பில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்ற இலங்கை கடற்படை படகு மோதியதில், தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கியிருந்தது.

படகில் இருந்த இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

ராஜ்கிரண் (27) என்ற அந்த மீனவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக கூறி, கடற்படையினரால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மீனவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படகிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 1ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

காட்டுக்குள் உல்லாசமாக இருக்க சென்றவர்கள் கைது

east tamil

25% மின்கட்டண குறைப்புக்கான கோரிக்கை – ஓமல்பே சோபித தேரர்

east tamil

தூய்மையான இலங்கை திட்டம் – விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் இலங்கை பொலிஸார்

east tamil

வெளிநாடு செல்ல பணம் சேர்க்க போதைப்பொருள் விற்ற பட்டதாரி யுவதி கைது!

Pagetamil

மலேசியாவில் இடம்பெறும் சொற்போர் விவாத போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு!

Pagetamil

Leave a Comment