கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக இன்னல்களுக்குள்ளான குடும்பங்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (19) வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக உட்பட்ட பகுதிகளில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக இழப்பீட்டு காசோலைகள் பெற தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கே பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளிற்கிணங்க பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நிதி ஒதுக்கீட்டில் 20 கோயில்களுக்கான நிதி ஒதுக்கீடும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் 18 கோயில்களிற்கு தலா ஒரு லட்சமும் 2 கோயில்களிற்கு தலா 2 லட்சமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.