26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

குடியிருப்பை சுற்றிச்சுற்றி வரும் உலகின் மிக நீண்ட நடைப்பந்தயம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் பகுதியில், உலகின் மிக நீண்ட நடைப் பந்தயம் இடம்பெற்றது.

அதில் கலந்துகொள்வோர், ஒரு புளெக்கைச் சுற்றி 4989 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.

புளோக்கைச் சுற்றி 5,649 முறை நடந்தால், பந்தயம் முடிவுறும். அதைச் செய்து முடிக்க சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. கலந்துகொள்வோர் நாள்தோறும் 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் இமயமலையின் உச்சத்தை எட்டியுள்ளனர்.ஆனால் புளொக்கைச் சுற்றிய, உலகின் மிக நீண்ட பந்தயத்தில் கலந்துகொண்டு அதை முடித்தோர் எண்ணிக்கை 49 மட்டுமே.

காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, பந்தயவீரர்கள் புளொக்கைச் சுற்றி ஓடுவர், நடப்பர்.

புளோக்கைச் சுற்றிச் சுற்றிச் செல்வதால் ஏற்படக்கூடிய சலிப்பே பந்தயத்தின் ஆகப் பெரிய சவால் என்கின்றனர் பலர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment