அவுஸ்திரேலியாவில் 104 மில்லியன் டொலர் மதிப்புள்ள அபின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.
அந்நாட்டு வரலாற்றில் இவ்வளவு அதிக மதிப்புள்ள அபின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியதில்லை.
450 கிலோகிராம் எடைகொண்ட அந்தப் போதைப்பொருள் சரக்குக் கப்பலின் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் மலேசியாவிலிருந்து மெல்பர்ன் நகருக்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருளை இறக்குமதி செய்ததாக மலேசிய ஆண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவருடைய பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1